அறிவியல் தமிழின் முதல் விதை...
வரலாற்றுக்கு முந்தய காலகட்ட்ம் முதல் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் வேளாண்மை,நீர்ப் பாசனம், கட்டிடக்கலை,மருத்துவம் போன்ற அறிவுத்துறைகளை அறிந்திருந்தனர்.தமிழ் இலக்கியங்களிலும், நிகண்டுகளிலும் இடம் பெற்றுள்ள இத் துறைகள் பற்றிய கலைச் சொற்களும்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைத்துள்ள அகழ்வாய்வுச் சான்றுகளும் ”தமிழர் அறிவியல்” வரலாற்றுக்கானா சான்றுகளாகும்.
தென்னிந்திய கடற்கரைப் பகுதிகளுக்கு வருகை தந்த போர்த்துக்க்கீசிய வணிகர்கள், அவர்களைத் தொட்ர்ந்து வருகைத் தந்த கிறித்தவ சமயப்பணியாளர்களும் தென்னிந்திய வெப்பமண்டல தாவர-பயிர் இனங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டினர். போர்த்துக்கீசிய வணிகர்களைத் தொட்ர்ந்து வருகைத் தந்த டேனிஷ் வணிக குழுமத்தினரின் ஆளுகைக்கு உட்பட்ட தரங்கம்பாடிக்கு சீகன்பால்கு (1683 - 1719) 09.07.1706 வருகைத் தந்தார்.
தமிழை முறையாக கற்ற சீகன்பால்கு 1709 ஆம் ஆண்டு பார்ப்பனரால்லாத மாணவர்களுக்காக பள்ளியைத் தொடங்கினார்.அவர் தொடங்கிய பள்ளி பார்ப்பனர்களால் பார்ப்பனர்களூக்காக நடத்தப்பட்ட திண்ணைப் பள்ளிகளுக்கு சவாலாக அமைந்தது. சீகன்பால்கு தொடங்கிய பள்ளியில் ஐரோப்பிய அறிவியல் (அ)காலனிய அறிவியல் பிரிவுகளான கணிதம், தாவரவியல், புவியியல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன. சீகன்பால்குவின் இம் முயற்சியே அறிவியல் தமிழ் என்ற புதிய துறை தோற்றத்திற்கான முதல் விதை.